Saturday, June 9, 2007

மக்கள் நாயகன் தாதா கோண்ட்கே

அன்பாதவன் / மதியழகன் சுப்பையா


மராத்தி திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் தாதா கோண்ட்கே. அவரது இடத்தை நிரப்ப இன்று யாரும் இல்லை. தாதா கோண்ட்கேவின் காரணத்தால் மராத்தி திரைப்படம் உலக அளவில் பேசப் பட்டது. மராத்தி திரைப்பட உலகில் தொடர்ந்து ஒன்பது வெள்ளி விழாப் படங்களை கொடுத்த கோண்ட்கே கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் சாதனையாளராக இடம் பிடித்து உள்ளார்.
கோகுலாஸ்டமி தினத்தில் பிறந்த இவருக்கு கிருஷ்ணா என்று பெயர் சூட்டப் பட்டது. நல்ல இசை ஞானத்துடன் வாட்டசாட்டமான வாலிபனாக வளர்ந்தார். இவர் தனது பகுதியில் உள்ள பேண்ட் வாத்தியக் குழுவில் சேர்ந்தார். இதனால் இவர் பேண்ட்வாலா தாதா என்று துவக்கத்தில் அழைக்கப் பட்டார். மக்கள் ராஷ்டிரிய சேவா தள் என்ற மக்கள் நல அமைப்பு ஒன்றில் சேர்ந்த தாதா நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். இயக்குனர் வசந்த் சப்னியின் ' இச்சா மாஜி பூரி கரா'' என்ற நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முறை மேடை ஏற்றப் பட்டது. மராத்தி திரைப்படமான 'தம்பிடி மாத்தி' என்ற படத்தில் இயக்குனர் பால்ஜி பெண்டார்க்கர் தாதாவை திரை உலகுக்கு அறிமுகப் படுத்தினார்.
தனது மண்மனம் மாறத நகைச்சுவை உணர்வாலும், இரட்டை அர்த்த வசனங்களாலும் நாட்டுப்புற பாடல் மெட்டுக்களாலும் மராத்தி திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். மராத்தியில் பதினாறு படங்களையும் இந்தியில் நான்கு படங்களையும் வழங்கி உள்ளார். இவரது படங்களுக்கு இவரே இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்.
நகைச்சுவை மன்னன் சார்லி சாப்லினை நினைவு படுத்தும் நடிப்புத் திறனால் மராத்தி ரசிகர்களின் மனங்களில் இன்னும் குடி கொண்டிருக்கிறார். இவரது அனைத்துப் படங்களிலும் நடிகை உஷா சவான் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிட வேண்டிய சிறப்பு அம்சமாகும்.
இவ்வாறு தனது திரைப்படங்களில் இன்னும் சில விஷயங்களை மாற்றாமல் வைத்து இருந்தார். உதாரணமாக பாடகி உஷா மங்கேஷ்கர் இவரது அனைத்துப் படங்களிலும் பாடி உள்ளார்.
இரட்டை அர்த்த வசனங்களை திரைப்படத்தில் காட்டுவது குறித்து அவரிடம் கேட்கையில் ' எனது படங்கள் மக்களுக்கானது. அவர்கள் இவ்வாறான வசனங்களை ரசிப்பதால் நான் வைக்கிறேன். எனது படங்கள் அவர்களை திருப்தி படுத்தினால் போதும். மற்றவைகள் குறித்து நான் கவலைப் பட மாட்டேன். எனது படங்கள் மில் தொழிலாளிகளுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் தயாரிக்கப் படுவது. கடுமையான வேலைக்குப் பின் அவர்களுக்கு மனச்சோர்வு போக்கும் கலைகள் தேவைப் படுகிறது. அதை என் படங்கள் செய்வதாக அவற்றின் வெற்றியின் மூலம் நான் தெரிந்து கொண்டேன். அதனால் தரமான என்ற முத்திரை குத்தி முதலாளி வர்க்கங்களுக்கான படங்களை செய்வதில் எனக்கு விருப்பமில்லை' என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் 'பணக்கார வர்க்கத்தினர் ஒரு திரைப் படத்தை திரும்பவும் பார்க்க வர மாட்டார்கள். னால் ஏழைகளும் மில் தொழிலாளர்களும் விவசாயிகளும் மனமகிழ்வுக்கு எனது திரைப்படங்களை மூன்று முறை கூட பார்க்கிறார்கள்' என்றார். இதுவே கூட இவரது படங்கள் அபார வெற்றி பெற்றதற்கு காரணமாக இருக்கலாம்.
மராத்தியில் 'தமாஷா' என்று சொல்லப் படும் நாட்டிய நாடகங்கள் மிகவும் பிரபலமாக இருந்த கால கட்டத்தில் அந்தக் கலையை வடிவம் மாற்றி சினிமாவாக தாதா கோண்ட்கே வழங்கியதால் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் என்று நம்பப் படுகிறது.
இந்திப் படங்களையும் செய்யும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க '' அந்தேரி ராத் மேன் தியா தேரே ஹாத் மேன்'' என்ற படத்தை நடித்து இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
பாடகி உஷா மங்கேஷ்கரைப் போல் பாடகர் ஜெயவந்த் குல்கர்னி இவரது பெரும்பாலான படங்களுக்கு பாடியுள்ளார். இவர்களின் உறவு இந்தி திரைப்பட இயக்குனர் நடிகர் ராஜ்கபூர் மற்றும் பாடகர் முகேஷ் குமார் ஜோடியைப் போல் இருந்தாதக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தான் மராத்திய மாவீரன் சிவாஜியின் வேடத்தில் நடிக்க முடியாது என்றும் மற்ற எந்த சீரியசான பாத்திரங்களையும் ஏற்று நடிக்க முடியாது எனவும் தான் தனது எல்லைகளை அறிந்ததாகவும் அவற்றிற்கு உட்பட்டே தனது பாத்திரங்களை அமைத்துக் கொள்வதாகவும் தாதா தெரிவித்து உள்ளார்.
தாதா தனது கடைசி காலம் வரை சீரியசான கதைகள் கொண்ட ஒரு படம் கூட இயக்கி நடிக்கவில்லை. முடிவடையாத அவரது கடைசிப் படம் சீரியசான படம் என்று நெருங்கிய வட்டங்கள் தெரிவித்து உள்ளன.
வி சாந்தாராம் இயக்கிய ' தோ ங்கேன் பாரா ஹாத்'' என்றப் படத்தைப் போல் சீரியசான படங்களை தனது இறுது காலக் கட்டங்களில் இயக்க இருப்பதாக தன் மனத் திட்டத்தை தெரிவித்து உள்ளார். னால் அவை நிறைவேறாமல் போய் விட்டது.
தும்ப் தும்ப் தும்ப் என்று ஒலிக்கும் இசையை எத்தனை முறை கேட்க முடியும். எல்லோருக்கும் டிஸ்கோவும் மேற்கத்திய காது கிழிக்கும் இசையும் தேவைப் படுவதாக இசையமைப்பாளர்கள் சொல்கிறார்கள் இவர்களால் திரையிசை மேதை நவுசாத் மற்றும் எஸ் ராமச்சந்திரனை போல் இசை வழங்க முடியாத காரணத்தால் இவர்கள் இவ்வாறு செய்கின்றனர். எனது இசையமைப்பாளர் கூட ஒருமுறை துணை இசைக் கலைஞர்கள் 150 பேரை வரவழைத்து விட்டு வெறுமனே 35 பேர்களை மட்டுமே பயன் படுத்தினார். இது எத்தனை முட்டாள்தனமான காரியம். தின் தாக் தின் தாக் என்று நமது பாரம்பரிய இசைக் கருவிகளை வைத்து ஒரு ரிக்கார்டு முழுக்க நிரப்பி ஒலித்தால் கூட மக்கள் ரசிப்பார்கள் என்று எண்பதுகளில் டிஸ்கோவும் மேற்கத்திய இசையும் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தாதா தனது கருத்தை இவ்வாறு தெரிவித்து உள்ளார் என செய்தி.
இல்லஸ்டிரேட்டட் வீக்லி ப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்தப் பேட்டியில் கலைப் படங்கள் குறித்தும் தாதா தனது காட்டத்தை தெரிவித்து உள்ளார். திரைப்பட இயக்குனர் ஜாபர் பட்டேல் உட்பட பலர் சோதனைப் படங்களை எடுப்பதாக சொல்லி வருகிறார்கள் இவர்கள் ஏன் திரைப்படங்களில் சோதனை செய்ய வேண்டும் விவசாயத்தில் சோதனை செய்தாலாவது சோற்று வளம் பெருகும்' என்று தெரிவித்து உள்ளார். இந்த பேட்டிக்குப் பின் இயக்குனம் ஜாபர் பட்டேல் தாதாவுடன் பேசிக் கொள்வதில்லை என்பதையும் தாதா மற்றொரு சமயம் தெரிவித்து உள்ளார்.
சுமார் இருபது ண்டுகளுக்கு தாதா கோண்ட்கே மராத்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வந்தார். அவர் தொட்டதெல்லாம் மிடாஸ்சின் தொடுதலாகவே அமைந்தது.
தாதா பேசும் போது வார்த்தைகள் ஏகே 47 ரக துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் வெளிப்படுவது போல் இருக்குமாம். இம்முறையில் வசனம் பேசும் அவர் தனது வேக மொழிக்கு நிறுத்தர் குறியீடுகளாகவும் அழகு பூத்தையல் போலவும் தனது உடல் மொழியை பயன்படுத்தி விடுவார் என்பது இவரது தனிச்சிறப்பு.
மும்பையின் மத்தியில் தார்தேவ் பகுதியில் தாதாவின் அலுவலகத்திற்கு மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வருவார்கள். அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதற்கும் அவர்களை சந்திப்பதற்கும் எப்பொழுதும் தாதா முகம் சுழித்ததே இல்லை. ரசிகர்கள் அவரது திரைப்படங்களில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை தெரிவித்து மகிழ்வார்கள். தங்கள் இல்லத்து மணவிழா மற்றும் பல்வகை விழாக்களுக்கும் அழைப்பு விடுப்பார்கள். இவற்றில் தாதா தவறாமல் கலந்து கொண்டுள்ளார்.
ஒரு நடிகராக இருந்து கொண்டு இவ்வாறு செய்ய வேண்டாம் என்று தாதாவின் நெருங்கிய வட்டங்கள் கேட்டுக் கொண்ட போதும். படப்பிடிப்பின் போது யாரும் பான்(வெற்றிலைப்பாக்கு) கொடுத்தால் வாங்கா வேண்டாம் விஷம் வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும் அவர் கண்டு கொள்ள மாட்டார். நான் சராசரி மனிதன் என் தொழில் நடிப்பாகிப் போனது. அதனால் நான் வாழ்க்கையில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ராம் ராம் தாதா என்று என்னை அன்புடன் அழைக்கும் எவரையும் நான் ஓடிப் போய் கட்டிக் கொள்வேன் என்று பதிலளித்து எதிராளர் வாயை அடைத்து விடுவார்.
மும்பையின் லால்பாக் குடிசைப் பகுதியில் பிறந்த இவர் அப்பகுதியில் எந்த வம்புதும்பு நடந்தாலும் 'தடாம்' என்று குதித்து பிரச்சனைகளை தீர்ப்பாராம். பெண்களை கிண்டல் செய்தல் போன்ற பிரச்சனையில் சோடா பாட்டில்கள், கற்கள், செங்கல் என வீசி சண்டையிட்டுள்ளார்.
அப்னா பாஜாரில் மாதம் அறுபது ரூபாய் சம்பளத்திற்கு காய்கறி கூடை சுமந்து தனது காலத்தை போக்கிய இவர் வாய்ப்பு கிடைக்கையில் நண்பர்களின் பேண்ட் வாத்தியக் குழுவிலும் பணியாற்றிக் கொள்வார். பேண்டில் அனைத்து கருவிகளையும் வாசிக்கக் கற்றுக் கொண்டார். தனக்கு தரவாக இருந்த மூத்த சகோதரரின் திடீர் மரணம் தாதாவை கடும் மனக்கஷ்டத்திற்கு உட்படுத்தியது. சுமார் ஒரு வருட காலத்திற்கு யாரிடமும் பேசவில்லை. ஒழுங்காய் சாப்பிடவில்லை. பைய்த்தியம் பிடித்தது போல் கிப் போனார். இப்படியே வாழ்ந்து என்ன பயன் என்று அவரே முடிவு எடுத்து தனது கவலைகளை மறக்க நகைச்சுவை அரிதாரம் பூசிக் கொண்டார்.
இவர் நடித்த முதல் நாடகமான 'இச்சா மாஜி பூரி கரா' மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை நடந்துள்ளது. இந்தி திரைப்பட பாடகி ஷா போஷ்லே இவரது நாடகங்களை தவறாது பார்த்து வந்தார். பின் மாராத்தி இயக்குனர் பாலாஜி பெண்டார்க்கர் மூலம் தாதாவின் திரையுலக பிரவேசம் நிகழ்ந்தது.
மராத்தி திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டி விட்டு இந்திப் பட உலகில் தனது திறமையை காட்ட வந்தார். தயாரிப்பாளர்களிடம் கதை சொன்ன போது காமெடி என்பது படத்தின் ஊடக இருந்தால் போதும் என்று சொல்லி மறுத்துள்ளனர். முதல் ரீலில் எட்டு கொலைகளை காட்டுதல் எந்த வகையில் நல்லப் படமாக இருக்க முடியும். அல்லது மக்களை அழவைக்கும் கதைகள் என்ன பயனைத் தரும் என தான் நடித்து இயக்கி மாராத்தியில் வெற்றி பெற்ற ' ராம் ராம் கங்காராம்' படத்தையே இந்தியில் ரீமேக் செய்தார். படத்தை தானே தயாரிக்கவும் செய்தார்.
மேலும் இந்திப் பட உலகில் எல்லோர் மீதும் கடுமையான தனது அதிருப்தியை தெரிவித்தார், இங்கு போலித்தனம் அதிகம் உள்ளதாகவும் சுலக்ஷனா பண்டித் போன்ற பட வாய்ப்பே இல்லாத நடிகைகளிடம் சென்றால் கூட 36 படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாக தெரிவிப்பார்கள். இந்த 36ம் எண் இந்திப் பட உலகின் வியாதி என்றும் கடுமையை தெரிவித்து உள்ளார்.
தாதா எண்பதுகளின் மையங்களில் ந்திரப் பிரதேசத்தில் என்டி ராமாராவ் நடிகராய் இருந்து அரசியலில் வெற்றிப் பெற்றதை போல் தானும் பெரும் வெற்றியைப் பெற வேண்டும் என சிவசேனா கட்சியில் சேர்ந்தார். தனக்கு சீட் தரும்படி சிவசேனா தலைவர் பால் தாக்ரேவிடம் கேட்க அவர் உனக்கு என்ன பதவி வேண்டும் என்று கேட்க தான் முதல்வராக வேண்டும் என்று தாதா தெரிவித்து உள்ளார். அதற்கு பால்தாக்ரே ' சிவாஜி பார்க்கின் குடிசைப் பகுதியிலிருந்து ஒருவன் முதல்வராக வரலாம் னால் அவனது குடும்பப் பெயர் கோண்ட்கேவாக இல்லாமல் ஜோஷியாக இருந்தால் மட்டுமே' என்று மறுத்து விடவே தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயருக்குப் பின்னால் எம் எல் ஏ என்ற எழுத்துகளை சேர்த்துக் கொள்ளும் கனவு பொய்யானது.
தனது வாழ்வில் வெற்றிக்கும் தோல்விக்கும் சம மதிப்பு கொடுத்தக் கலைஞன் தாதா கோண்ட்கே. தாதா பிறந்தும் அவரது ஜாதகத்தில் வாழ்க்கை முழுவதும் பெரும் தோல்விகளைக் காணப் போவதாக பண்டிதர் தெரிவித்து உள்ளார். னால் அது பொய் என்று நிறுபித்து விட்டேன் என்கிறார் தனது வெற்றிச் சிரிப்போடு.
டம்பரத்தை கொஞ்சமும் விரும்பாத தாதா பூனாவுக்கு செல்லுகையில் ஒற்றை மனிதனாக கப்பல் போன்ற காரில் செல்லாமல் மாநில பயணிகள் பேருந்தில் பயணம் செய்து உள்ளார்.
கால் முட்டுவரை தொளதொள என்றிருக்கும் கால்ச்சட்டையும் அதில் கீழே வரை தொங்க விடப்பட்ட நாடாவுமே அவரது திரைப் படங்களின் உடையாக இருந்து வந்திருக்கிறது. தன்மை ஒரு பாமரனாகவே அவர் எப்போதும் சித்தரித்து காட்டியுள்ளார். அப்படியே வாழ்ந்தும் உள்ளார்.
தாதா தனது கடைசி காலம் வரை திருமணம் கதவர் போல் காட்டிக் கொண்டாலும் சட்டபூர்வமாக மனைவியும் ஒரு மகளும் அவருக்கு உண்டு. னால் அவர் தனது இறுதி காலம் வரை தனித்தே வாழ்ந்தார். இது எவர்க்கும் புதிரான ஒரு விஷயம்.
தனது 68ம் வயதில் மார்ச் மாதம் 14ம் தேதி 1998ல் அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். மாநிலத்தின் அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தாதாவின் துவக்கப் படங்களில் இருந்து கடைசி வரை நாயகியாக் இருந்த நடிகை உஷா சவான் புனேயிலிருந்து உடனடியாக வந்து கதரினார். '' எங்கு போனாலும் சொல்லிவிட்டுப் போவாய், இந்த முறை ஏன் சொல்லவில்லை'' என்று உரக்கக் கத்தி அழுதார்.
தாதாவின் மறைவின் போது அவரது மனைவியும் மகளும் அங்கு இருந்தனர். அவரது மகள் '' வாழ்ந்த காலம் முழுவதும் ஊர் மக்களையெல்லாம் சிரிக்க வைத்த நீங்கள் என்னை ஏன் ஏற்றுக் கொள்ளாமல் அழவைத்தீர்கள்?'' என்று கதரியதற்கு பதில் சொல்ல தாதா இல்லைதான் வழக்கம் போல் கேள்விகளை தவிர்த்து விட்டு தனது வேலைக்கு விரைவது போல் அப்பொழுதும் விரைந்து இருந்தார்.
கலைஞர்கள் வாழ்வில் சோகமும், கஷ்டமும் எத்தனை ழமாகவும் அதிகமாகவும் உள்ளதோ அத்தனை தீவிரமாகவே அவர்கள் செயல் பட்டு வந்திருக்கிறார்கள். சராசரிகள் தான் சிறிய விஷயங்களுக்காகவும் பெரிய அளவில் சோக கொண்டாட்டம் நடத்தி விடுகிறார்கள். இக்கட்டுரையின் துவக்க வரிகளாலே முடிக்கிறேன். மராத்தி திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் தாதா கோண்ட்கே. அவரது இடத்தை நிரப்ப இன்று யாரும் இல்லை.
--------------------------------------------------------------------------------------------------------

1 comment:

Anonymous said...

You have posted lot of info on Khondke....

I always remember his song:

Daagla Daagla la...
To timtim kazhu......

Marathi friends told that this was also of double meaning.