Saturday, June 23, 2007

இளமை பொங்கும் மராத்தி சினிமா

மூன்று கால் நூற்றாண்டுகளுக்கு முன் கனவு தொழிலாளிகள் தாதாசாஹேப் தொர்னே மற்றும் தாதாசாஹேப் பால்கே கிய இருவரும் சந்த் துக்காராம் மற்றும் அயோதயாச்சா ராஜா கிய இரண்டு மராத்தி மொழி பேசும் திரைப்படங்களை உருவாக்கி மராத்தி திரையுலகின் திறப்பு விழாவை நடத்தி வைத்தனர்.
நாளும் கிழமையும் சுட்டிக் காட்ட அவை குறித்து வைக்கப் படவில்லைதான் னால் மராத்தி சினிமா 1932ம் ண்டு பிறந்தது என்பது உறுதியான தகவல். இன்று அது எழுபத்தைந்து ண்டுகள் கடந்தும் இளமை ததும்பி நிற்கிறது. வியப்பிற்குறிய விஷயம் என்னவென்றால் இதற்கு முன் ண்டிற்கு பதினைந்து படங்களை மட்டுமே தயாரித்து வந்த மராத்தி திரையுலகம் 75ம் ண்டில் வியக்கும் வகையில் ண்டிற்கு 75 படங்கள் என்ற கணக்கை தொட்டுள்ளது மகிழும் செய்திதான்.
மேலும் பிரபல மராத்தி நடிகை ஜெயஸ்ரீ காட்கர் மராத்தி திரையுலகில் வந்து ஐம்பது ண்டுகள் கிறது என்பது குறிப்பிடத் தக்கது. 1953ம் ண்டு ''திஸ்தே தசே நஸ்தே'' என்றத் திரைப்படத்தில் அறிமுகமாகி மராத்தி மற்றும் இந்திப் படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். ''சாங்கதே ஐய்க்கா'' என்ற சாதனைத் திரைப்படத்தில் நடித்து மராத்தி திரையுலகின் சிறந்த நடிக்கைக்கான சிம்மாசனத்தை பற்றினார். மாநில அளவிலும் அதனைத் தாண்டியும் பல அமைப்புகள் அவரது திறமையை பாராட்டி பரிசுகளும் விருதுகளும் வழங்கி பெருமை படுத்தி உள்ளது. ''மராத்தி திரையுலகம் ஒரு பொக்கிஷம் போன்றது. அங்கிகரிக்கப் படவில்லை என்றாலும் பொக்கிஷம் தனது பெருமையும் மதிப்பும் குன்றாமல் இருப்பது போல் மராத்தி திரைப்படங்கள் இருக்கின்றன. மராத்தி திரையுலகில் எனது வாழ்வின் பெரும்பகுதியை கழித்தது எனக்கு பெருமை தரும் விஷயமாக இருக்கிறது'' என்கிறார் நடிகை ஜெயஸ்ரீ.

இப்படி பழைய விஷயங்களை கொண்டாடியும் பலம்பெரும் படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை பாராட்டியும் பொழுது கழிப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்து வரும் ண்டுகளில் மராத்தி திரையுலகை ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி உருட்டிக் கொண்டு செல்ல பலம் பொருந்திய தோள்களைக் கொண்ட இளைஞர்கள் களத்தில் இறங்கி உள்ளனர். பாலிவுடின் மசாலாத் திரைப்படங்களுடன் போட்டியிட முடியாமல் திணரிக் கொண்டிருக்கும் மராத்தி திரைப்படங்களை உலக தரத்துக்கு கொண்டு போகும் கடும் முயற்சிகள் நடப்பதை கண்கூடாக காண முடிகிறது. எந்த வகையிலும் சமாதானம் செய்து கொள்ளாமல் தாங்கள் தேர்வு செய்த கதைகளை திரையில் காட்சி மொழியாக்கித் தருவதில் உறுதியாக உள்ளனர் மராத்தி திரைப் படைப்பாளிகள்.
வணிகச் சூழலில் சிக்கி கலை சிதைந்து போவதை விரும்பாத மாராத்தி படைப்பாளிகள் மண்ணின் மணத்துடன் கூடிய கதைகளையும் மக்களின் எதார்த்த வாழ்க்கையையும் படம் பிடிப்பதில் பிடிவாதமாக உள்ளனர். மராத்தி திரைப்படங்களில் படைக்கப் படும் கதாபாத்திரங்கள் நம்மையும் நம்மைச் சுற்றிய மக்களையும் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.
மராத்தி திரைப்படங்கள் மிக சிறப்பான பயணத்தை மேற்கொண்டுள்ளது. துவக்க காலத்தில் பக்திப் படங்களையும் இசை/பாடல்களை மையமாகக் கொண்டப் படங்களையும் பின் தமாசா என்னும் மேடை நடனக் கலையை மையமாகக் கொண்ட கிராமியக் கதைகளையும், பின் இயக்குனர் நடிகர் தாதா கோண்ட்கேவின் இரட்டை அர்த்த நகைச்சுவைப் படங்களையும் பின் இயக்குனர்கள் சச்சின் மற்றும் மகேஷ் கொதாரேவ கியோரின் இயக்கத்தில் வந்த எதார்த்த வகை நகைச்சுவைகளைக் கொண்ட படங்களையும் பின் இளமை பொங்கும் மாறுபட்ட படங்களான ''பிந்தாஸ்த்'' மற்றும் ''சாவர்கேத்-எக் கவுன்'' ''மாத்திசியா சுலி'' ''கோரிஜி'' மற்றும் ''சாவலீ'' கினவும் மற்றும் சமீபமாக நகரத்தின் நடுத்தர வர்க்க பிரச்சனையை மையமாகக் கொண்டு டிஜிட்டல் படமாக வந்த '' டோம்பிலி பாஸ்ட்' படம் வரை மராத்தி திரையுலகம் மிக மாறுபட்ட ஒரு பாதையில் பயணித்து வந்துள்ளது.
மராத்தி திரையுலகம் பல அறிவும் திறமையும் கொண்ட இயக்குனர்களை வரமாக பெற்றுள்ளது. இயக்குனர் பிரபாத்தின் காலத்தில் துவங்கி வி. சாந்தாராம், பால்ஜி பென்டார்கர், ராஜா கோஸ்வாமி, ராஜா பராஞ்பே, ஜாப்பர் பட்டேல், அமோல் பாலேகர், ஜாயோ, நசிகெட் பட்வர்தன், ஸ்மிதா தல்வல்கர், மகேஷ் மாஞ்ரேகர் என ஒரு பட்டாளத்தையே சொல்லாம். சமீபமாக நிஷிகாந்த் காமத், கஜேந்திரா அஹிரே, பிபின் நந்தகர்னி, சந்திப் சாவந்த், சந்திரகாந்த் குல்கர்னி மற்றும் ராஜேந்திர தலக் கியோர் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பல புதிய முயற்சிகளுக்கு வித்தாய் மராத்தி திரையுலகம் இருந்துள்ளது. மராத்தி திரையுலகம் மிகத் தரமான படங்களை தனது பிடியில் வைத்துள்ளது. பாலிவுட் மற்றும் தென்னாட்டு திரையுலகோடு ஒப்பிடுகையில் மராத்தி திரையுலகம் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியதுதான் னால் படைப்பாக்கத்தில் பின் தங்கவில்லை.
மக்களின் ரசனையோடும் காலத்தோடும் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்டாலும் புதுமையும், சோதனை யுத்திகளையும் பயன்படுத்தி வெற்றி காணாமல் இல்லை. இன்னும் பிடிவாதமாய் தரமான படங்களை தந்துகொண்டிருக்கும் சூழல் அதன் எதிர்காலத்தையும் வளர்ச்சியையும் கண்முன் காட்டுகிறது.
மற்ற மாநிலத் திரைப்படங்களுக்கு இருப்பதை விடவும் மராத்தி திரைப்படங்களுக்கும் போட்டியாக கோடிகள் புலங்கும் பாலிவுட் படங்கள் உள்ளன. ''டோம்பிவிலி பாஸ்ட்'' படத்தின் இயக்குனர் நிஷிகாந்த் காமத் மற்றும் இயக்குனர் கஜேந்திர அஹிரே பாலிவுட் படங்களை எங்களால் என்றுமே மிஞ்ச முடியாது என்று ஒத்துக் கொண்டுள்ளனர். னால் காலத்தால் அழியாத பல சுவடுகளை எங்களால் தான் பதிவு செய்ய முடியும் என்று முகத்தில் உறுதியொளி காட்டுகின்றனர். தென்மாநிலங்களில் இன்னும் கலைப்படங்களுக்கென்று பசியோடும் தாகத்தோடும் காத்திருக்கும் வட்டம் இருப்பது போல் மராத்தி மொழியின் மிக யதார்த்த படங்களுக்கும் இருக்கிறது என்பதை உறுதிபட தெரிவிக்கின்றனர்.
''ஸ்வாஸ்'' திரைப்படம் மராத்தி திரையுலகை மீண்டும் தூக்கி நிறுத்தியது. மிகக் குறைந்த பொருளாதாரத்தில் உருவாக்கப் பட்ட ''டோம்பிவிலி பாஸ்ட்'' திரைப்படம் தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேசிய அளவில் படவிழாக்களில் கலந்து கொண்டு மராத்தி திரைப்படங்களின் திறமையை நிறுபித்து உள்ளன.
மேலும் பிபின் நந்தகார்னியின் ''உத்திராயன்'' அஹிரேவின் ''சாரிவர் சாரி'' மற்றும் ராஜேந்திர தலாக்கின் ''சாவலி'' கியத் திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டு உற்சாகப் படுத்தியப் படங்கள்.
மேலும் தொன்னூறுகளில் வந்த நகைச்சுவைப் படங்களான ''அகபாய் அரேச்சியா'' மற்றும் ''ஜத்ரா'' கியப் படங்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவைகள். னால் விரைவிலேயே இந்த அலை ஓய்ந்து வர்த்தக ரீதியான படங்கள் உருவாகத் தொடங்கி நல்ல படங்கள் கரையொதுங்கிய நுரையாகிப் போனது.
சமீபத்தில் இந்தியாவில் நடந்த அனைத்து திரைப்பட விழாக்களிலும் மாரத்தி திரைப்படங்களின் எண்ணிக்கை மகிழ்ச்சிக்குறியதாக இருந்தது. எண்ணிக்கையில் மட்டுமல்ல பட உருவாக்கமும் கதைசொல்லலும் வியக்கத்தகுந்ததாக இருந்தது.
தொழில்நுட்ப போர்வைகளை போர்த்திக் கொண்டு அலையும் மசாலத் திரைப்படங்களுக்கு மத்தியில் படம் பார்த்து எழுந்த பின்னும் என்னவோ செய்கின்ற படியான படங்கள் மராத்தியில் தயாரிக்கப் பட்டு வருவது சந்தோஷமளிக்கிறது.
குறிப்பாக சியத் திரைப்பட விழாவில் இந்தியப் படங்கள் பிரிவில் அதிகம் இடம் பெற்றது மராத்தி திரைப்படங்கள் தான் என்பதை கண்டிப்பாய் நம்பித்தான் க வேண்டும். கன்னடம் மற்றும் மலையாள மொழிப் படங்களும் இன்னும் தங்கள் படைப்பாற்றல் இழக்காமல் இருக்கிறது. தமிழ் திரைப்படங்கள் இத்தகு விழாக்களில் இடம் பெறுவது மிகக் குறைவே.
மராத்தி திரையுலகம் 75 ண்டுகள் கடந்து வந்த போதிலும் இளமை மாறாமல் தனித்தன்மை இழக்காமல் இருப்பது பெருக்கைகுறியதுதான்.



மதியழகன் சுப்பையா

No comments: