அன்பாதவன்
மதியழகன் சுப்பையா
வெற்றிக் களிப்பில் மதிரா (போதை வஸ்து) குடித்து போதையில் நிதானமாகவும், டை அலங்கோலமாகதபடி கவனமாகவும் ட்டம் போடுவதாகட்டும் பாத்திரம் சிறப்பாக அமைய தலைக்கு மொட்டைப் போட்டுக் கொள்வதாகட்டும், விபச்சாரியாக, லெஸ்பியனாக, அழகு நாயகியாக, வஞ்சிக்கப் பட்ட பெண்ணாக, கற்பிழக்கும் கீழ்குடி பெண்ணாக ஏன் பேயாகக் கூட நடித்து விட்ட ஒரு நடிகையைத் தெரியமல் இருப்பவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு சினிமா பார்க்காதவர்களாகத்தான் இருக்க முடியும். சபானா ஜ்மி தான் இவ்வாறு பல நடிப்பு பரிணாமங்கள் காட்டிய நடிகை.
1970களில் இந்திய சினிமாத் துறையில் புதிய ரத்தம் பாய்ந்த காலம் எனலாம். இந்தியாவில் சினிமா உருவாகும் அனைத்து மாநிலங்களிலும் புதிய பாணியில் படம் இயக்கும் எதார்த்த இயக்குனர்கள் உருவானார்கள். இந்த சூழலில்தான் 'புதிய அலை' சினிமா (New Wave cinema) உருவாகியது. இந்த மாதிரியான ஒரு சூழலில் சினிமா உலகில் மாற்றமான போக்கில் நல்ல இயக்குனர்கள் சிறந்த நடிகர்கள் மற்றும் காலத்தால் அழியாத திரைப்படங்கள் நமக்க கிடைக்க வாய்ப்பாக இருந்தது.
1974ல் 'பாஸ்லா' என்றப் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் நடிகை சபானா ஜ்மி. முதல் படம் அந்த அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும் கவனிக்கப் பட்டார். இயக்குனர் ஷ்யாம் பெனகலின் ' அங்குர்' படத்தில் தனது பண்பட்ட நடிப்பால் இந்திய நாட்டையே நிமிர்ந்து உட்கார வைத்தார். வாளிப்பான உடலமைப்பு, முன்னே பின்னே சதைப்பற்று என நடிகையை அளக்கும் பாரம்பரிய அளவுகோளில் எங்கும் பொறுந்தாதவர் சபானா.
'அங்குர்' படத்தில் தாழ்த்தப் பட்ட பெண்ணாக நடித்துள்ளார். கணவன் விட்டுப் போன பின் பண்ணையின் முதலாளியின் இளம்மகன் பட்டினத்திலிருந்து வந்து தங்கியிருக்கிறான். அவனுக்கு பணிவிடைகள் செய்யும் அவன் அவனுடன் படுக்கவும் செய்கிறாள். சை தீர அவளை அனுபவிக்கும் அவன் இளம் பெண் ஒருத்தியை திருமணம் செய்து திரும்புகிறான். அடித்து ஒதுக்கப் படுகிறாள். இப்படியான சூழலில் தன்னால் எதிர்க்கவும் முடியும் என்பதை கிணற்றில் தண்ணீர் பாம்பு ஒன்றின் சீற்றதை அலட்சியம் செய்து அதனை தனது கையால் தட்டி விடும் காட்சியில் அவளுக்குள் இருக்கும் எதிர்ப்பு முதல் முறையாக வெளிப்படுகிறது. படம் முழுக்க அதிகம் வசனம் பேசாமல் னால் தனது உடல் மொழியால் அனைத்தையும் உணர்த்தி நடித்திருக்கும் சபானா இந்தியர்களின் கவனத்தை உடனடியாக பெற்றார்.
நடிகை ஸ்மிதா பாட்டில் காலமாகிப் போன காரணத்தாலோ என்னவோ அவர் நடிக்க இருந்த பல பாத்திரங்களில் இவர் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. னால் சபானாவை விட்டால் வேறு யாரும் அவர் செய்த குறிப்பிடும்படியான பல பாத்திரங்களை அவரைத் தவிர வேறு யாரும் சிறப்பாக செய்திருக்க முடியாது.
தீபா மேத்தாவின் 'பயர்' படத்தில் ஓரிணச் சேர்க்கையில் ஈடுபடும் பாத்திரத்தில் நடிக்க வந்த அத்தனை எதிர்ப்புகளையும் மீறி முழு ஈடுபாட்டுடன் அந்த பாத்திரமாவே தனது சக நடிகை நந்திதாதாஸ்சுடன் நடித்திருந்தார்.
சபானாவுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த ' காட் மதர்' திரைப்படம் குறிப்பிடத் தக்கது. ண்கள் க்ரமிப்பில் இருக்கும் ரசியல் உலகில் தனியொரு பெண்ணாக அரசியலில் ஈடுபட்டு சாணக்கியத் தந்திரம் புரியாமல் அத்தனை சூழ்ச்சிகளையும் பீய்த்து எரிந்து விட்டு கடும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்றுத் திரும்பும் சபானா மதிரா எனப்படும் போதை பாணத்தை குடித்துவிட்டு வெற்றிக் கழிப்பில் ட்டம் போடும் அந்த நடிப்பு யாரும் சொல்லிக் கொடுத்தோ அல்லது பயிற்சியால் வந்தது என்று யாரும் கூறிவிட முடியாது.
நல்ல நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்கள் வயிரை காரணம் காட்டி கொஞ்சம் குப்பைகளும் கொட்டி விடுகின்றனர். சபானாவும் குப்பை கொட்டி உள்ளார். கமர்சியல் குப்பை. மரத்தைச் சுற்றி நடனம் டி உள்ளார். இடுப்பு ட்டி விரசமாடியுள்ளார். னால் நல்ல படங்கள் செய்யத் தவரியதில்லை.
' மக்டி' என்றப் சிறுவர்களுக்கான திரைப்படத்தில் மாமிசம் திண்ணும் பேயாக நடித்து குழந்தைகள் மனங்களில் நீங்க இடம் பிடித்து உள்ளார். னால் திரைத் துறையில் நடிகைகள் எத்தனைதான் சிறப்பாக செய்தாலும் அவர்களுக்கு கொடுக்கப் பட வேண்டிய அங்கிகாரம் முழுமையாக கிடைப்பதில்லை. இயக்குனருக்கே அல்லது அப்படத்தில் உள்ள நடிகருக்கோ என போய்விடும் ண்களின் திக்கத்தில் பெண்களின் திறமைகள் மழுங்கடிக்கப் பட்டு விடப் படுகிறது.
இயக்குனர் ஸ்யாம் பெனகலின் 'மண்டி' திரைப் படத்தில் விபச்சாரி பாத்திரத்தில் சபானா நடித்து உள்ளார். விபச்சாரம் செய்கின்றவளுக்குறிய நடை பேச்சு முறை என அனைத்தையும் அத்தனை சிறப்பாய் செய்திருந்தார் ண்களிடம் காட்டும் செயற்கை புன்னகையும் காமப் பார்வைவும் நலினமற்ற நடையும் தனது காரியத்தை சாதிக்க எது வேண்டுமானலும் செய்யும் துணிவும் என தேர்ந்த விலைமாதுவாக அவர் நடித்ததுள்ளது பாரட்டத்தக்கது. னால் படத்தின் இயக்குனர் பற்றியும் சிறிய பாத்திரத்தில் நடித்த நடிகர் நஷிர்தின்ஷா பற்றியும் பேசப் பட்ட அளவுக்கு சபானா பேசப் பட வில்லை.
நடிப்பு மட்டுமல்லாது தன்னை முழுமையாக அற்பணித்த சமூக சேவகியாகவும் மக்களிடம் சபானா அறிமுகமாகி உள்ளார். அடித்தட்டு மக்களின் உரிமை பிரச்சனை பெண்களுக்கான பிரச்சனை என்றால் அழைக்காமல் ஜராகி விடுவது சபானாவின் வழக்கம். தனது இமேஜ் பற்றியெல்லாம் கவலை கொள்ளாது மும்பையின் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்கள் பிரச்சனைகளை கேட்டு அவர்களுக்கான உதவிகளை இன்றளவும் செய்து வருகிறார்.
பிரபல இயக்குனர்கள் பலரும் நடிப்பிற்காக நம்பி இருக்கும் நல்ல நடிகைகளுள் சபானாவும் ஒருவர்.
Saturday, June 9, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment