Saturday, June 9, 2007

ராம் கோபால் வர்மாவின்

அன்பாதவன்
மதியழகன் சுப்பையா



சமீப்த்தில் வெளி வந்த இந்திய மொழிப் படங்களில் எண்பது விழுக்காடு திரைப்படங்கள் காதலை மையமாகக் கொண்ட கதைகளை உடையது. இன்னும் வித விதமாக காதலித்துக் கொண்டிருக்கிறனர். பாலிவுட் திரையுலகில் ஷாருக், சல்மான், மிர் என கான்களின் ராஜியம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது. பார்முலாப் படங்கள் வந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்தது. பிரபல இயக்குனர் யஷ் சோப்ரா தனது முக்கோணக் காதல் கதைகளை இன்னும் விடாமல் அதே திரைக்கதையில் அவ்வப்போது மார்க்கெட்டில் உச்சத்தில் உள்ள நடிகர், நடிகைகளைக் கொண்டு படம் பண்ணி வருகிறார். இயக்குனர் டேவிட் தவன் தனக்கென்று ஒரு காமெடி பார்முலாவை வைத்துக் கொண்டு நாலாந்தர காமெடி இயக்குகிறார். காமெடி படம் என்பதால் நாம் சிரித்தே க வேண்டிய கட்டாயத்தில் சிரிக்கலாம் அல்லது திரையரங்கில் நம்மை ஒருமாதிரியாக பார்ப்பார்களே என்ற அச்சத்தில் நாம் சிரிக்கலாம். இயக்குனர் மகேஷ் பட்டின் குடும்பம் ஒட்டு மொத்தமாக பாசம் மற்றும் தகாத உறவுகளை வெளிப்படுத்தும் படங்களை மேற்கிலிருந்து காப்பியடித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை. தவறி ஒரு சில நல்லப் படங்கள் வந்து விடுவது உண்டு னால் அவை வணிக ரீதியாக வெற்றிப் பெருவதில்லை.
மும்பையின் சாலையோரக் கடைகளில் பானிப்பூரியும், பேல் பூரியும் தின்றுத் திரியும் மனிதர்கள் கற்பனையிலும் கண்டிறாத இடங்களையும் உயர்வான வசதியான வாழ்வையும் காட்டிக் கொண்டிருந்த நிலையில் படம் பார்க்க வருபவர்களின் வாழ்ஹ்வை மொழியை சித்தரிக்கும் வகையிலான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கத் தவங்கினார் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வந்து மின் விசிரியை இயக்கச் சொல்லிக் கேட்கும் நாயகனிடம் ஏசி இயங்கிக் கொண்டிருப்பதாக வெயிட்டர் சொல்ல அப்படியானல் ஏசியை இங்க திருப்பி வை என கேட்டு தான் எதற்கும் சலைத்தவனில்லை என பரைசாற்றும் குடிசைப் பகுதி இளைஞன் பாத்திரத்தை சித்தரித்த வர்மா மும்பை வாழ் மக்களின் வாழ்வை அனுஅனுவாகத் தெரிந்தவர் என்பது பளிச்சிடும். மும்பையில் தாதாக்களின் அட்டகாசத்தையும் தாதாக்களுக்காக துப்பாக்கி தூக்கிய இளைஞர்கள் நிலை என்ன என்பதை இவரது படங்களில் காணக் கிடைக்கிறது. மும்பை தாதாக்களைத் தவிர வேரெதுவும் தெரியாதா என அனைவரும் சலித்துக் கொள்ளும் முன் அவர் தனது திறமைகளை திரையில் காட்டத் துவங்கி விட்டார்.
சென்னைத் தமிழ் என்பது போல மும்பைக்கென ஒரு தனி மொழி உள்ளது. 'பம்பையா' எனப்படும் இந்த மொழியை வர்மாவின் திரைக்கதாப்பாத்திரங்கள் இயல்பாய் பேசி நடிப்பதை பார்த்த மக்களுக்கு கொண்டாட்டம் தான்.
தனக்கு பிடித்த இயக்குனர்களாக ஹாலிவுட்டின் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் மற்றும் பாலிவுட்டின் இயக்குனர்கள் சேகர் கபோர், கோவிந்த் நிகலானி போன்ற பலர் இருந்தாலும். இவர்கள் யாருடைய பாதிப்பும் வர்மாவின் படங்களில் இல்லை. ' திரைப்படம் பார்ப்பவர்கள் மற்றும் விமர்சகர்கள் கியோரின் அபிப்ராயங்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. அவர்களுக்கு எனது படங்கள் பிடிக்க வேண்டும் என்றும் நான் விரும்பவில்லை. எனக்கு பிடித்தமான ஸ்டைலில் படத்தை இயக்கி வருகிறேன்' என்று முழங்குகிறார் வர்மா.
ராம் கோபால் வர்மா துணை யக்குனராக 'ராவ்கரிலு' மற்றும் 'கலெக்டர் கரி அப்பாய்' கிய படங்களில் பணியாற்றினாலும் அதில் இவரது பங்கு ஒன்றுமில்லை. தெலுங்கு பட உலகின் பிரபல நடிகர் நாகர்ஜுனாவிடம் தனது' சிவா' படத்தின் கதையைச் சொல்ல அவருக்குப் பிடித்துப் போனது. இப்படத்தை நடிகர் நாகர்ஜூனா தயாரித்தார். இப்படம் தமிழில் ' உதயம் என்றும் இந்தியில் 'சிவா' என்றும் மொழிமாற்றப் பட்டு வெளியிடப் பட்டது. னால் தெலுங்கில் வணிகரீதியாக அடைந்த வெற்றி பிற மொழிகளில் இல்லை. னாலும் ஒரு கல்லூரி மாணவன் வன்முறைக்கு தள்ளப் படுவதும் அப்பகுதியின் பிரபல தாதா (நடிகர் ரகுவரன்)வுடன் மோதும் காட்சிகளிலும் புதிய பாணி இருந்தது எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.

வர்மா தெலுங்கு படங்கள் இயக்குவதில் ர்வம் காட்ட துவங்கினார். அவர் இயக்கியப் படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்றது. தாதாக்களின் ராஜ்யங்களை வெளியுலகுக்கு கொண்டுவரும் விதமான படங்கள் இயக்குவதில் இவருக்கு நிகர் இவரே. நடிகர் ஜெகபதிபாபு மற்றும் நடிகை ஊர்மிளா மாடோன்ட்கர் கியோர் நடித்த 'காயம்' படத்திற்கு இயக்குனர் மணிரத்னம் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 'வர்மா கார்பரேசன் லிமிடேட்' என்ற திரைப்பட தயாரிப்பு கம்பெனியை ரம்பித்தார். இதன் மூலம் 'மனி மனி' 'குலாபி' 'வொ·ய்ப் ப் மிஸ்டர் வரபிரசாத்' 'தெய்யம்' என வரிசையாக தெலுங்கு படங்களை தயாரித்தார். இந்தி பட உலகில் 'ரங்கீலா' படம் மூலம் மிகப் பிரபலமான இயக்குனராக அங்கிகாரம் பெற்றார். வர்மாவின் படங்களில் வழக்கமான படங்களின் திரைக்கதையமைப்பு மற்றும் கவர்ச்சி மசாலா போன்ற அயிட்டங்கள் இல்லாமல் எதார்த்தமான முறையில் பாத்திரப் படைப்பும் காட்சியமைப்பும் கொண்டு இயக்குவது இவருடைய சிறப்பு.
நிழலுலக தாதாக்களின் வாழ்வை மையமாக வைத்து இவர் இயக்கிய 'சத்யா' படம் திரையுலகையில் ஒரு புதிய பாணியை ஏற்படுத்தியது. இப்படத்தை தழுவி பல படங்கள் பாலிவுட்டில் இயக்கப் பட்டன. 'சத்யா' படத்தில் நடித்த மனோஜ் பஜ்பாய், சக்ரவர்த்தி, மகரண்ட் தேஷ்பாண்டே போன்ற நடிகர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தப் படம் அடே நேரத்தில் இசையமைப்பாளர் சந்திப் சவ்தா மற்றும் இப்படத்திற்கு வசனம் எழுதிய அனுராக் காஷ்யாப் கியோருக்கும் வாழ்வளித்தப் படம். வசனகர்த்தா அனுராக் காஷ்யாப் மணிரத்னத்தின் 'யுத எழுத்து' இந்தி பதிப்பின் வசனகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது. அனுராக் காஷ்யாப் இயக்கிய 'பிளாக் பிரைடே' படம் இன்னும் வெளிவரவில்லை.

மேலும் பிரபல தாதாக்களின் வாழ்வை மையமாக வைத்து 'கம்பனி' 'D' போன்ற படங்களை இயக்கிய இவருக்கு பல முறை கொலை மிரட்டல்களும் வந்துள்ளது.

எதிலும் புதுமை செய்ய நினைக்கும் வர்மா குறும்படங்கள் மீது தனியாத ர்வம் கொண்டவர். அவர் குறும்படங்கள் இயக்கத் திட்டமிட்டாலும் அவற்றின் குறைந்த காலம் கருதி அவற்றி திரையங்குகளில் திரையிட இயலாது போகும் என று குறும்படங்களை கொத்தாக்கி ஒரு படத்தை தயாரித்தார். ' டர்னா மனா ஹை' என்ற படத்தில் இருபது நிமிடங்கள் ஓடக் கூடிய று கதைகளை வெவ்வேறு இயக்குனர்களை வைத்து இயக்கி வெற்றி கண்டார். இப்படத்தில் பாடல்கள் இல்லை. மேலும் பாடல்களும் இடைவேளையும் இல்லாமல் ஓடக் கூடிய ஒரு மணி நேரப் படம் ஒன்றையும் தயாரித்தி இயக்கி உள்ளார். வர்மாவின் அபிமான நடிகையான ஊர்மிளா மாடோன்ட்கர் மற்றும் மனோஜ் பாஜ்பாய் நடித்த 'கோன்' என்றப் படம் திகிலடையச் செய்யும் ஒருமணி நேரச் திரைச் சித்திரம்.
புதிய பல இயக்குனர்களை அறிமுகப் படுத்தி வரும் ராம் கோபால் வர்மா. பல சோதனை முயற்சிகளை தனது படத்தில் செய்துள்ளார். ஊர்மிளா மாடோண்ட்கருக்குப் பின் வர்மாவின் ஸ்தான நடிகையான அந்த்ரா மாலி நடிக்க இவர் இயக்கிய 'மைன் மாதூரி திஷித் பன்னா சாஹத்தி ஹ¥ன்' என்ற படத்தில் கிராமத்துப் பெண் ஒருத்தி பெரிய நடிகையாக வேண்டும் என்ற சையில் திரையுலகில் வந்து திண்டாடுவதை மிக எதார்த்தமாக காட்சிப் படுத்தி உள்ளார். இப்படம் திரையுலகில் காலடி டுத்து வைக்க நினைப்போருக்கு ஒரு எச்சரிக்கைப் படமாக உள்ளது எனலாம்.

மேலும் தனது லட்சியப் படமாக 'நாச்' என்ற படத்தை மீண்டும் அந்த்ரா மாலியை வைத்து இயக்கினார். இதில் லட்சிய வெறி கொண்டு நடனத்தில் பல புதிய உத்திகளை செய்ய நினைக்கும் ஒரு பெண்ணின் வாழ்வை மிக தெளிவாக படம் பிடித்து உள்ளார். இப்படம் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை னால் நிறைய திருப்தி தந்தது என வர்மா சந்தோஷம் தெரிவித்து உள்ளார்.

ஹாலிவுட்டின் பிரபல 'காட் பாதர்' திரைப்படத்தை தழுவி நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் கியோர் நடிக்க 'சர்கார்' என்ற படத்தை இயக்கினார். இப்படம் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேவின் வாழ்வை மையமாகக் கொண்டது என பேசப் பட்டது னால் அது அப்படி இல்லை என இரு தரப்பினரும் மறுத்துள்ளனர். 'சர்கார்' படம் துவங்கும் முன் தான் ' காட் பாதர்' படத்தின் பாதிப்பால் அப்படத்தை தழுவி இயக்கி இருப்பதாக டைட்டில் போட்டு விட்டு படத்தை துவக்குகிறார். இந்தப் படத்திலும் பாடல்கள் இல்லை.

பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வர்மாக தனது ஸ்தான இசையமைப்பாளர் சந்திப் சவ்தாவுடன் பல மணி நேரங்களை செலவழிக்கிறார். புதிய பல இளைய இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி தனது பட இயக்க நிறுவனத்திற்கு 'பேக்டரி' என பெயரிட்டுள்ளார். எப்பொழுதும் புதிய இயக்குனர்களை உடன் வைத்துக் கொண்டு புதிய பாணியில் கதை சொல்ல முயன்று வருகிறார்.

இவரது படங்களில் புது முகங்களுக்கு நிறைய வாய்ப்பு தருகிறார். இவரது இயக்கத்தில் நடித்த பல நடிகர்கள் சிகரம் தொட்டு விட்டனர். குறிப்பாக மனோஜ் பாஜ்பாய், ரஜ்பால் யாதவ், விவேக் ஒபராய், மற்றும் அப்தப் சிவ்தஷனி கியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

'சிவா' மற்றும் 'ஷானாஷனம்' கிய படங்களுக்காக சிறந்த இயக்குனருக்கான 'நந்தி' விருது இருமுறை பெற்றுள்ளார். மேலும் 'சத்யா' படத்திற்காக பிலிம்பேர் விருதும் பெற்றிருந்தாலும் விருதுகளுக்கா தான் படம் இயக்குவதில்லை என்றும் திரைப்படங்கள் தன்னை உற்சாகப் படுத்துகின்றன அதனால் இயக்குகிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இவர் சினிமா அமைப்புகள் மற்றும் பத்திரிக்கைகள் வழங்கும் விருதுகளை ஏற்பதில்லை. மேலும் விருது விழாக்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுமில்லை.

வன்முறை, மர்மம், திகில் கிய விஷயங்களை தாரமாகக் கொண்டே இவர் தனது எண்பது விழுக்காடு படங்களை இயக்கி உள்ளார்.
சமீபமாக பிரபலமான பழைய திரைப்படங்களை புதிய தலைமுறை நடிகர்கள் கொண்டு இயக்கும் பணியில் தீவிரமாக உள்ளார். பாலிவுட் திரையுலகில் இதுவே புதிய டிரெண்டாக உள்ளது. உலகப் புகழ் பெற்ற 'சோலே' படத்தை ரீமேக் செய்து வருகிறார். மேலும் திரைப்படத்தில் 'ஐய்ட்டம் சாங்' எனப்படும் புதிய பாணி பாடல் நடனத்தை துவக்கி வைத்தவர் வர்மா. இப்படி பல விஷயங்களை தனது படங்களில் அறிமுகப் படுத்தி வந்த வண்ணமுள்ளார்.

சில நடிகளைகளோடு கிசுகிசுக்கப் பட்ட இவர் பெண்களை அங்கிகரிப்பதில்லை. ' புத்திசாலித்தனமான பெண்களை தனக்குப் பிடிக்காது எனவும் எனக்கு அறிவுரையும் லோசனையும் வேண்டுமெனில் புத்தகங்களை படித்துக் கொள்வேன் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். வருடத்திற்கு இருபது படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கும் வர்மாவின் 'பேக்டரி' இயக்கம் இன்று பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக பதிவு பெற்று விரைவில் பங்கு மூலதனமும் திரட்டப் பட இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. சிறிய சந்து பொந்துகளில் பெரிய கதைகள் உள்ளன. வெளியே வர இயலாமல் சிறந்த இயக்குனர்கள் பலர் உள்ளார்கள் அவர்களை வெளியில் கொண்டு வருவதுதான் என் வேலை அதனால் நல்ல கதையிருந்தால் திறமையிருந்தால் உடனடியாக என்முகவரி தேடி வாருங்கள் என பேட்டி ஒன்றில் அழைப்பு விடுத்து இருக்கும் வர்மா வித்தியாசமானவர்.

இன்று ஐந்து நட்சத்திர ஹொட்டல்களின் ஏழாவது மாடியில் குளிர்பதன அறைகளில் அமர்ந்து மதுப்பொத்தல்களில் ஊறி கதை தேடும் இயக்குனர்கள் மத்தியிலும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் பணமும் தேடி பஞ்ச் டயாலாக் பேசும் நடிகர்கள் மத்தியிலும் எதார்த்தமான பாத்திரங்களை உலவ செய்யும் இயக்குனர் வர்மா, திரைப்படங்களை மக்கள் வாழ்வின் பிரதிபலிப்பாகவே இருக்க வேண்டும் என்கிறார். மேலும் தொழில் நுட்பங்களும், பிரமாண்ட செட்களும் இருந்தால் மட்டும் போதாது மக்கள் சந்தித்த சம்பவமும் வாழ்க்கை எதார்த்தமும் அவர்கள் பேசும் பண்படாத மொழியும் தான் தனது படத்திற்கான பலம் என அவர் தெரிவிக்கிறார்.

லை-லை வர்மாவின் பேக்டரி சங்கொலி முழங்குகிறது. ர்வமும், திறமையும் உள்ளவர்கள் படையெடுங்கள் ராம் கோபால் வர்மாவின் ராஜ்ஜியம் உங்களுக்காக காத்திருக்கிறது.

No comments: