Saturday, June 9, 2007

இந்தி சினிமாவும்

அன்பாதவன்
மதியழகன் சுப்பையா



இந்தியர்களின் பண்பாடு, மொழி, உடை, நாகரீகம் என அனைத்தும் வெளிநாட்டவருக்கு வெள்ளித் திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்கள் திரைப்பட இயக்குனர்களே. அதிலும் இந்தித் திரைப்படங்கள். இந்தியர்கள் மரியாதை மிக்கவர்களாகவும், மனிதாபிமானிகளாகவும், அழகானவர்களாகவும், உழைப்பாளிகளாகவும் இன்னும் பலப்பலவாகவும் வெளிநாட்டவர்கள் அறிந்தும் புரிந்தும் கொள்ள காரணமாய் இருப்பவர்களாக இந்தி திரைப்பட இயக்குனர்களைத்தான் சொல்ல வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களை நம்பி எடுக்கப் படும் திரைப்படங்கள் இங்கு அதிகம். இந்திய பாரம்பரிய குடும்பங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் வெளிநாட்டவர்களுக்கு அரும்விருந்து. இதனை பரிமாற இந்திய இயக்குனர்கள் போராடி வருகின்றனர்.

இந்திய நாட்டை விட்டு பிழைப்புக்காக வெளிநாடு சென்றவர்கள் வெளிநாட்டவர்களாகவே குடியுரிமை பெற்று விட்டாலும் அவர்களால் தங்கள் இந்திய நாட்டின் எதையும் மறக்க முடியவில்லையாம். அவர்கள் விடுமுறைகளில் இந்தியா வருவதும் இங்கு பன்னாட்டு சந்தைப் பொருட்களை பயன் படுத்தி பந்தாக் காட்டுவதும் ஒருபுறம் இருந்தாலும் கலைகள் அவர்களின் மதிப்பீடுகளால் தான் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. அனைத்து விதமான கலைகளுக்கும் காசு கொடுத்து காப்பாற்றி வருவது இந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான். வணக் காப்பகங்களாகட்டும், கலையமைப்புகளாகட்டும் இல்லை கல்வி கலாச்சார அமைப்புகளாகட்டும் நிதி வழங்கி வாழ வைத்துக் கொண்டிருப்பது இந்த வெ.வா.இந்தியர்கள்தான். அதிக பொருட் செலவில் தயாரிக்கப் படும் பாலிவுட் திரைப்படங்கள் இவர்களை மகிழ்விக்கவும் இவர்களால் காசு சம்பாதிக்கவுமே சமீபமாக எடுக்கப் படுகிறது.
' ஹம் ப்கே ஹை கோன்' (1994) என்ற திரைப்படம் திரையுலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. திரையறங்குகளில் வருடத்திற்கும் மேல் ஓடியது. இயக்குனர் கோவிந்த மூனிஸ் இயக்கிய போஜ்பூரி படம் ' நதியா கே பார்' (1982) என்ற படத்தின் கதையை அப்படியே நகலெடுத்து இயக்குனர் சூரஜ் ர். பார்ஜாத்யா இயக்கியப் படம் தான் 'ஹம் ப்கே ஹை கோன்'. இப்படத்திற்கான திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் பொறுப்புகளை ஏற்றுச் செய்த இயக்குனர் பார்ஜாத்யாவுக்கு இந்த பணிகளை செய்து முடிக்க று ண்டுகள் னதாம். ஏற்கனவே வந்து வெற்றி பெற்ற ஒரு படத்தின் கதையை மறுபடியும் படமாக்க இத்தனை கஷ்டப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.
நாயகனின் அண்ணன் மனைவி இறந்து விடுகிறாள். நாயகனுக்கும் அண்ணியின் தங்கைக்கும் இடையில் காதல். அண்ணனுக்கு கொழுந்தியாளுடன் மறுமண ஏற்பாடு. இறுதியில் அண்ணன் தம்பிக்கு விட்டுக் கொடுப்பதாக அமைந்த குடும்ப சிக்கல். இந்த கதைக்கு இப்படி ஒரு வெற்றிக்குக் காரணம். இந்திய மக்களிடையே உடைந்து போன கூட்டுக் குடும்ப பந்தங்கள். குடும்ப கொண்டாட்டங்கள். இவை திரைப்படங்களில் பிரமாண்டமான செட்களுடன் காட்டப் படும் போது மக்கள் மகிழ்கின்றனர். இந்த சூத்திரத்தை வைத்துக் கொண்டு நிறைய வெற்றிப் படங்கள் வெளியாகி உள்ளது.
சமீபமாக வந்த பாலிவுட் படங்களின் கதையமைப்பும் படப்பிடிப்பும் வெளிநாட்டில் தான். வெளிநாடு வாழ் இந்திய மக்களின் வாழ்வையை மையமாகக் கொண்ட கற்பனைக் கதைகளை மையமாகக் கொண்டே உருவாக்கப் பட்டுள்ளன. பிரபல இயக்குனர் மற்றும் தற்போது இந்தியாவின் மிகப் பெரிய படத் தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் யஷ் சோப்ரா, இதுவரையிலான தனது அனைத்துப் படங்களிலும் எதாவது ஒரு காரணத்தை கதையில் வலியத் திணித்து சுவிட்ஜர்லாந்து சென்று படபிடிப்பு செய்யும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். உதாரணமாக 'கபி கபி', 'சில்சிலா' 'சாந்தினி' 'டர்' 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' இன்னும் பலப்பல. சமீபமாய் அவர் தனது பழக்கத்தில் கொஞ்சம் மாற்றம் செய்து வேறு நாடுகளுக்கும் சென்று படப்பிடிப்பை நடத்துகிறார். ஐரோப்பியாவில் படம் பிடிக்கப் பட்ட 'ஹம் தும்' , முழுக்க முழுக்க ஸ்திரேலியாவில் படம் பிடிக்கப் பட்ட 'சலாம் நமஸ்த்தே' தற்போது வெளியாக இருக்கும் 'தர ரம் பம்' வரை படத்தின் மிகு விழுக்காடு காட்சிகள் வெளிநாட்டில் படம் பிடிக்கப் பட்டவைதான்.
இப்படியாக இயக்குனர் கரன் ஜோகரின் அனைத்துப் படங்களும் எதாவது ஒரு வகையில் வெளிநாட்டில் கதை நிகழ்வது போல் அமைக்கப் படுகிறது. இயக்குனர் சஞ்ஜய் லீலா பன்சாலி, அசுதோஸ் குவாரிகர், பர்ஹன் அக்தர் இப்படி அனைத்து முன்னனி இயக்குனர்களும் தங்கள் கதைகள் இந்தியாவில் தொடங்கி வெளிநாட்டில் அல்லது வெளிநாட்டில் தொடங்கி இந்தியாவில் என்று இருக்கும்படியாக பார்த்துக் கொள்கின்றனர்.
'அஜ்னபி' என்றோர் படம் வெளிநாட்டில் வாழும் இந்திய நண்பர்கள் இருவர் தங்கள் மனைவியரை மாற்றிப் புணருவது போன்ற கதையமைப்பில் உருவாக்கப் பட்டது. இவ்வாறான மட்டரக சிந்தனையோட்டமுள்ள படம் தோல்வியைத் தழுவவில்லை மாறாக முதலுக்கும் அதிகமாக பணம் பார்த்து விட்டார்கள். இவ்வாறாக இந்தியர்களால் உருவாக்கப் படும் படங்கள் இந்தியாவின் பண்பாட்டை வெளிப் படுத்துவதாக அமைகிறது. மக்களின் நாகரீகம், கலை, பழக்க வழக்கம் என திரைப்படங்களில் பதிவு செய்யப் படும் விஷயங்களே உலக அரங்கில் திரையிடுகையில் பிற நாட்டு மக்களைச் சென்றடைகிறது. இவ்வாறான படங்களைக் பிறநாட்டு மக்கள் இந்தியா இத்தகை நாடா என வியக்கவும் இல்லை வருத்தப் படவும் காரணமாக இருக்கிறது.
இந்தியாவின் நகரங்கள் இன்று ஓரளவு நாகரீகம் பெற்றிருக்கிறது. னால் இதனை முழுமையான நாகரீகம் என்று சொல்லி விட முடியாது மக்களின் பழக்கவழக்கங்களில் கொஞ்சம் மாற்றம் இருக்கத்தான் செய்கிறது னால் பாலிவுட் படங்களில் காட்டப் படும் அளவுக்கு மாற்றமில்லை. கோடி கணக்கான ரூபாய்களை செலவு செய்து குடியிறுப்புகள், உடையலங்காரங்கள் மற்றும் வாழ்வு முறைகள் என அனைத்திலும் ஒரு பகட்டு காட்டப் படுகிறது. இதுதான் இந்தியாவின் இத்தகைய நிலை. இதுதான் இந்திய மக்கள் என பதிவு செய்யப் படுகிறது.
' இந்தியா கிராமங்களின் நாடு இங்குள்ள மக்கள் மேற்கத்திய டைகள், நாகரீகங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் பார்திருக்க மாட்டார்கள். உலக சினிமா ஒரு சிறு வட்டத்திற்குள் மட்டுமே திரையிடப் படுகிறது. அதனால் தான் எனது படங்களில் நான் நவ நாகரீகத்தையும் மிகையான டைகள் மற்றும் கவர்ச்சி காட்சிகளையும் வைக்கிறேன். பாமரர்களால் இவற்றை கற்பனை கூட செய்ய முடியாது. நான் அவற்றை அவர்களின் கண்முன் காட்சிப் படுத்துகிறேன்' என்றார் பிரபல இயக்குனர் ராஜ் கபூர். னால் தற்போதைய இயக்குனர்கள் இவ்வாறு எந்த விளக்கமும் கொடுக்க தயாராக இல்லை. தங்கள் தவறுகளை நியாப் படுத்துவதோ அதற்கு விளக்கம் தருவதோ கூட இல்லை.
இந்தியாவின் உறவு சிக்கல்களைக் காட்ட செல்வம் கொழிக்கும் ஒரு குடும்பத்தையும் அரண்மனையில் வாழும் படியான சூழலையும் காட்டி படம் பிடிக்கின்றனர். இதனை காணும் வெளிநாட்டவர்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சி கிடைக்கிறது. நாலாந்தர உறவு சிக்கல்களும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை பிரச்சனைகளும் பார்க்கக் கிடைக்கிறது. னால் இவ்வகைப் படங்கள் நம் நாட்டு பண்பாட்டின் குறியீடாக இருக்கிறது.
இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலும், மக்களின் வாழ்க்கை சூழலும் பதிவு செய்யப் படாமலேயே இருக்கிறது. எதார்த்தத்தை பதிவு செய்வதாக சிலர் கிளம்பினாலும் அதில் மிகை புனைவு செய்து விடுகின்றனர். கோடிகளில் செலவு செய்தே தீருவோம் என்ற அடம்பிடிப்பின் காரணமாக நல்லக் கதைகளிலும் நஞ்சு கலந்து விடுகிறது. பாலிவுட் படங்கள் ஒன்று மும்பை நகரத்தை மையமாகக் கொண்டு கதைகளை அமைத்துக் கொள்கிறது அல்லது வெளிநாட்டு தொடர்புடைய கதைகளை தேர்ந்து கொள்கிறது. எழுத்தாளர் ஜும்பா லஹிரி எழுதிய ' நேம்ஷேக்' நாவல் இயக்குனர் மீரா நாயரால் திரைப்படமாக்கப் பட்டது. இந்தப் படமும் இந்தியாவிலிருந்து நியுயார்க் நகரில் குடிபெயர்ந்த வங்காளி குடும்பத்தின் கதை. வங்காளத்தின் அடையாளத்தை இழக்காமல் இருக்க குடும்பம் முயற்சிக்க குடும்பத்தின் வாரிசோ நியுயார்க் நகர நாகரீகத்தின் வாழ் விரும்புவதாகவும் இதனால் உருவாகும் பிரச்சனைகள் தான் இப்படத்தின் சுறுக்கக் கதை.
இதற்கு முன் கால்பந்தாட்ட ர்வம் கொண்ட பஞ்சாபி குடும்பத்தின் இளம் பெண் தனது விளையாட்டு பயயிற்சியாளராக இருக்கும் வெளிநாட்டவரை நேசிப்பது குறித்த மற்றும் வெளிநாட்டவர்களைப் போல் குட்டைப் பாவாடை அணிந்து விளையாடுதலுக்கு குடும்ப எதிர்ப்பு என படத்தின் கதை செய்யப் பட்டிருந்தது. விருதுகள் பெற்ற நல்லபடம் இது. னால் வண்ணங்களும், வாழ்க்கையும் இந்தியாவில் கொட்டிக் கிடக்க இந்திய இயக்கினர்கள் அனைவரும் வெளிநாட்டு தொடர்ப்பு படங்களையோ இல்லை வெளிநாட்டில் விலை போகும் இந்தியக் குடும்பக் கதைகளையோ படமாக்குவது ஏன் என்றுதான் விளங்கவில்லை.

No comments: