Saturday, June 9, 2007

அரைவேக்காட்டு வணப் படங்களும் கொறிக்க சில குறும்படங்களும்

மதியழகன் சுப்பையா
அன்பாதவன்


உலகமும் உலகிலுள்ள உயிரணங்களும் தோன்றியதற்கான வரலாறு மத நூல்கள் ஒவ்வொறும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கதை புணைந்து கொண்டன. னால் மனித குலத்தின் நாகரீகம் பலவகையான வணங்களால் அறியப்படுகிறது. காலத்தின் சுவடுகள் உலகெங்கும் பதிந்து கிடக்கிறது.
நாகரீக மனிதன் தற்கால மனிதனின் வாழ்நிலை அரசியல் சுற்றுச் சூழல் மற்றும் சமூகப் பிரச்சனைகளை நவீன கருவிகளின் உதவியோடு பதிவு செய்து வருகிறான். வணங்கள் புத்தகமாக்கப் படுவது. குறைந்து போயிற்று. எதார்த்த காட்சிகளை ஓவியமாக்குவது குறைந்து போனது அதிநவீன புகைப் படங்கள் எடுக்கத் துவங்கியதும் எல்லாம் மாறி விட்டது.
மேலும் சலனப் படங்களும், ஒளிப்பதிவு நுட்பமும் வணங்களை இன்று புதிய தளத்திற்கு கொண்டு போய் விட்டது. படப்பிடிப்பில் புதிய பாணியும். வணத் தொகுப்பில் புதிய யுத்தியும் பயன் படுத்தப் பட்டு விட்டன. பார்வையாளர்களை கவரும் வண்ணமும் வர்த்தக சினிமாவுக்கு இணையான படப்பிடிப்பும் ஒளி அமைப்பும் செய்யப் பட்டு வனங்கள் இன்று வளர்ந்து ளாகி நிற்கின்றன.
இந்திய நாடு சுதந்திரம் பெரும் போது அக்காட்சிகளை படம்பிடிக்க இந்திய அரசிடம் படக்கருவிகள் இல்லாத காரணத்தால் இன்று அக்காட்சிகளை பிரிட்டிஷ் தொலைக் காட்சியினரிடமிருந்து வாங்கும் நிலைக்கும் வந்துள்ளோம். மேலும் வணப் படங்களை பாதுகாக்க வேண்டி இந்திய அரசிடம் சமீப காலம் வரை முறையான பிரிவு எதுவும் இல்லை என்பது வருந்தத் தக்கது.
மத்திய அரசு சார்பில் இயங்கி வரும் பிலிம் டிவிஷன் ப் இந்தியா என்ற அரசு நிறுவனம் இன்று வணம் மற்றும் குறும்படங்களின் காப்பகமாக விளங்கி வருகிறது. இந்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் மேற்பார்வையில் பிலிம் டிவிஷன் இயங்கி வருகிறது. பிலிம் டிவிஷன் ஜனவரி திங்கள் 1948ம் ண்டும் துவங்கப் பட்டது. இந்திய செய்தித் துறை 1943ம் ண்டு யுத்த நிகழ்வுகளை பதிவு செய்து தெரிவிக்க வேண்டி துவக்கப் பட்டுள்ளது. நாடு முழுவதும் வணப் படங்களை திரையிட ஒளிப்பதிவு சட்டம் 1918ம் ண்டு ஏற்படுத்தப் பட்டது.
பின் 1949ம் ண்டு முதல் பிலிம் டிவிஷன் வணப் படங்கள், செய்திப் படங்கள் மற்றும் அனிமேஷன் படங்களை ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நாட்டின் மூளை முடுக்கெல்லாம் திரையிடத் துவங்கியது. இப்படங்கள் சுமார் பதினைந்து பல்வேறு மொழிகளில் திரையிடப் பட்டுள்ளன.
சுதந்திரத்திற்கு பின் இந்திய நாட்டின் வளர்ச்சி நிலை, முக்கிய நிகழ்வுகள் மற்றும் இன்பங்கள், துன்பங்கள் என அத்தனை நிகழ்வுகளையும் படம் பிடித்து பாதுகாத்து வருகிறது. பிலிம் டிவிஷனின் தலைமை அலுவலகம் இந்தியாவின் செலுலாய்ட் நகரமான மும்பையில் அமைந்துள்ளது. மும்பையிலுள்ள பிலிம் டிவிஷனில் ரிகார்டிங் தியேட்டர்கள், எடிட்டிங் அறைகள், அனிமேஷன் பிரிவு, கேமராக்கள், வீடியோ செட்டப்புகள் மற்றும் பிரிவீவ் தியேட்டர்கள் என படத்தயாரிப்பிற்கான அனைத்து வசதிகளும் ஒருங்கே உள்ளன. மேலும் இந்தியாவின் மிக முக்கிய பதினைந்து மொழிகளில் மொழிப்பதிவும் செய்யப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
படப் பிரின்ட்களை நாடு முழுவதும் விணியோகிக்க மும்பை, சென்னை, திருவணந்தபுரம், மதுரை, ஹைதரபாத், விஜயவாடா, பெங்களூர், நாக்பூர், லக்னவ் மற்றும் கொல்கத்தா கிய பத்து முக்கிய நகரங்களில் கிளைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்திய நாட்டைப் பற்றி கலை, கல்வி, தொழில், விழாக்கள் என பல்வேறு தலைப்புகளில் சுமார் எட்டாயிரத்திற்கும் மேலான படங்கள் உள்ளன. இவற்றின் மூலம் இந்திய நாட்டின் அசைவுகள் அத்தனையும் கண்டு அறியலாம். மேலும் பிலிம் டிவிஷனின் படங்களை www.filmsdivision.org என்ற இணைய தளத்தில் தரவிரக்கிப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் VCD தகடுகளை வாங்கவும் செய்யலாம்.
தற்போது படங்களை டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற்றி அவற்றை காக்க அரசு வணச் செய்துள்ளது. இதனால் சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டப் படங்கள் பாதுகாக்கப் படுவதுடன் மிகப் பெரிய சொத்தாகவும் விளங்கும்.
அனிமேஷன் என்ற கேலிச்சித்திரப் படப் பிரிவில் பாரம்பரிய படம்செய்முறையை மாற்றி நவீன கணினி நுட்பங்கள் கொண்ட பிரிவு அமைக்கப் பட்டுள்ளது. 2-D மற்றும் 3-D வகைப் படங்களை இயக்க ஓபச், கான்செர்டோ, ஹை-என்ட் மற்றும் மாயா போன்ற கணினி மென்பொருட்களால் ன கூடமும் அமைக்கப் பட்டுள்ளது.
வணப் படங்கள் மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தக் கருத்துகளை கொண்ட பிரபலமான கதைகளையும் படமாக்கி வருகிறது. மக்களுக்கு சொல்ல வேண்டிய அரசு செய்திகளையும் பட வடிவில் கொடுக்க பிலிம் டிவிஷன் உதவி புரிகிறது.
பிலிம் டிவிஷன் மும்மை சர்வதேசிய வணப்படம், குறும்படம் மற்றும் அனிமேஷன் படங்களுக்கான விழாவை (MIFF) 1990ம் ண்டு முதல் நடத்தி வருகிறது.
இரண்டு ண்டிற்கு ஒருமுறை நடக்கும் இவ்விழா உலகப் புகழ் பெற்றது. தேசிய மற்றும் சர்வதேசியப் பிரிவில் போட்டிப் பிரிவில் உள்ள படங்களில் சிறந்தப் படங்களுக்கு ரொக்கப் பரிசுடன் விருதுகளும் வழங்கப் படுவகிறது. இதனால் உலகெங்கிலும் உள்ள பட இயக்குனர்கள் எதிர்பார்க்கும் ஒரு விழாவாகி விட்டது. மும்பையில் மட்டுமல்லாது முக்கிய நகரங்களிலும் இவ்வாறான பட விழாக்களை பிலிம் டிவிஷன் நடத்தி வருகிறது.
இவ்வாண்டும் கோலகலமாக விழா நடந்தது. சுமார் முப்பத்தைந்து நாடுகளில் இருந்து படங்கள் தேர்வு செய்யப் பட்டிருந்தது. அதில் சிறப்பு பிரிவுகளாக படங்கள் திரையிடப் பட்டது. ஜெர்மனியிலிருந்து 'ஹைபிரிட் பார்ம்ஸ்' (Hybrid forms) வகைப் படங்கள் திரையிடப் பட்டன.
உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்லினின் சமகாலத்தவரும் அக்காலகட்டத்தின் மூன்று முக்கிய நகைச்சுவை நடிகர்களுள் ஒருவருமான பஸ்டர் கீட்டனின் (Buster Keaten) மூன்று மௌனப் படங்கள் திரையிடப் பட்டன.
சார்க் பேக்கேஜ் (SAARC Package) பிரிவில் நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் கிய நாடுகளில் இருந்து படங்கள் திரையிடப் பட்டன.
வட கிழக்கு மாநிலங்களை உங்களுக்குத் தெரியுமா? என்ற கேள்வியோடு 'வட கிழக்கு மாநிலப் படங்கள்' என்றப் பிரிவில் அசாம், மெஹலாயா, அருணாச்சல் பிரதேஷ், மணிப்பூர், மிஜோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா கிய மாவட்டங்களிலிருந்து படங்கள் வந்திருந்தது.
மும்பை பட விழாவில் ஸ்திரேலியப் படங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. இவ்வாண்டும் AFC என்ற பிரிவில் ஸ்திரேலியாவின் வணப் படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப் பட்டன.
இன்று உலகின் அதிகபடியான ரசிகர்களை கொண்ட இராணியப் படங்களுக்கென்று 'இராணியன் இண்டிப்பெண்டட்' என்றப் பிரிவில் சிறந்த படங்களை காண முடிந்தது.
மாணவர்கள் பிரிவில் சென்னை திரைப்பட இயக்கம், புனே திரைப்பட இயக்கம் கொல்கத்தாவின் சத்யஜித் ரே திரைப்பட இயக்கம், டெல்லியின் ஜமியா மிலியா திரைப்பட இயக்கம், அஹமதாபாத்தின் நேஷனல் இன்ஸ்ட்டிடியுட் ப் டிசைன், BPFTIO, கத்தக் மற்றும் ஹம்பர்க் மீடியா ஸ்கூல், ஜெர்மனி என பல திரைப்பட கல்லூரிகளில் இருந்து மாணவர்களின் திறமைகள் வெளிப்பட்ட சிறந்த படங்கள் தொகுத்து திரையிடப் பட்டது.
மிகவும் குறிப்பிடத் தக்க பிரிவு என்றால் ' பிரி இன்டிபென்டன்ட் பில்ம்ச்' பிரிவில் இந்தியாவின் சுதந்திரத்திற்கு மும் இயக்கப் பட்ட வணப் படங்களை தூசு தட்டி காண்பித்தது. இதுவரை இல்லாத சிறப்பு எனலாம்.

தூர்தர்ஷன் கிளாசிக்ஸ் பிரிவில் நாம் பார்க்கத் தவறிய பல சிறந்த குறும்படங்கள் மற்றும் வணப் படங்களை திரையிட்டது பெரும் மகிழ்ச்சி.

உலகெங்கிலும் இருந்து நடனம் மற்றும் நடனம் சார்ந்த படங்களை 'டான்ஸ் வித் கேமரா' என்றப் பிரிவில் திரையிட்டார்கள்.

மேலும் உலகின் உயரிய திரைப்பட விருதான ஸ்கார் விருது பெற்றப் படங்களும் ஸ்காருக்கு பரிந்துரைக்கப் பட்டப் படங்களும் திரையிடப் பட்டது. இந்தப் பிரிவு படங்களைக் காண திரைப்பட ர்வலர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் நீண்ட படங்கள், குறும்படங்கள், வணப் படங்கள் மற்றும் அனிமேஷன் படங்கள் இடம் பெற்றது.
சிறப்பு திரையிடலாக பிரான்ஸ் நாட்டின் இயக்குனர் ரேய்மண்ட் டிபார்டனின் படங்கள் திரையிடப் பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படி விழா முழுக்க விதவிதப் படங்களால் நிரம்பி இருந்தது. னால் அரங்கம் நிரம்பியது ஏனோ வெளிநாட்டு வணப் படங்களுக்குத்தான். காரணங்கள் பல எனலாம். இந்திய நாட்டின் வணப் படங்களுக்கு இயக்குனர்கள் எடுத்துக் கொள்ளும் பிரச்சனை அல்லது சம்பவம் என்பது நீர்த்துப் போன ஒன்றாக உள்ளது. சிலர் நல்ல கருக்களை எடுத்துக் கொண்டாலும் அவற்றைப் படமாக்கத் தெரியாத நிலை. இன்று இந்தியாவின் முன்னனி தனியார் செய்தி தொலைக் காட்சிகள் செய்யும் செய்தி தொகுப்பு வேலைச் செய்து விட்டு படம் பண்ணி விட்டதாக வெளியே வந்து விடுகிறார்கள். பிரச்சனைகள் குறித்த சரியான ய்வு இருப்பதில்லை. படம் முடிந்தபின் பலப்பல கேள்விகளோடு பார்வையாளர்கள் எழுந்து செல்லும் நிலை உருவாகிறது. ஒரே காட்சிகளை அல்லது ஒரே மாதிரியான காட்சிகளை மீண்டும் மீண்டும் காட்டுவது சலிப்படையச் செய்கிறது. இந்தியாவில் சமீபகாலமாய் எத்தனையொ நிகழ்ந்து விட்டது. னால் காலப் பதிவுகளாய் எதுவும் இல்லை.

No comments: