மதியழகன் சுப்பையா
நல்ல பாம்புகள் நல்லவகைகளா? என்ற கேள்வி அபத்தமானதாக இருக்கலாம் னால் நல்ல பாம்பு என்று அழைக்கப் படுவதனால் அது பெயருக்கேற்ப குணமுடையதாக இருந்து விடுவதில்லை. அழகும் பளபளப்பும் பெற்று படமெடுத்து டுகையில் பயத்தை உண்டு பண்ணும் அவை வாய்க்குள் விஷம் வைத்திருக்கும். மேல் தாடையிலுள்ள பையிலிருக்கும் விஷத்தினை தனது பல்லூசியால் உடலில் ஏற்றும். நல்ல பாம்பின் கடி நல்ல கடிதானே என விட்டோமென்றால் உயிரை விட வேண்டியதுதான்.
பாம்புகளைப் பொறுத்து விஷத்தின் வீரியமும் பாதிப்பும் மாறுபடுகிறது. குமுகாயத்தில் விஷம் ஏற்றும் பாம்புகளை மக்களும் மக்களைத் தேடி பாம்புகளும் வந்து அழிவுகளை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. சில பாம்புகளின் விஷம் மெல்லக் கொல்வன. அவை உறுப்புகளை சிதைத்து தவனைமுறையில் கொல்லும்.
திரைப்படங்கள் சமுத்தாயத்தை பிரதிபளிக்கிறதா இல்லை சமுதாயம் திரைப்படங்களையா என்ற பட்டிமன்ற வாத விவாதங்களை பொழுது கடத்த பேசுவதை தவிர்த்து க்கமாக சில சிந்திக்கலாம். தமிழ் திரைப்பட வரலாற்றில் சில இயக்குனர்களின் நுழைவு சிறப்பாக பதிவு செய்யப் பட்டுள்ளது. சிகப்பு கொடி பிடித்தபடி திரையுலகில் நுழைந்தவர்கள் கட்டுப்பாட்டு காற்றரைகளில் தொடர்ந்து இருக்கவே சிகப்பு வெளுத்து காவியாகி விட்டிருக்கிறது.
அவ்வப்போது தொம்மென குதித்து பெரும் வட்ட அலைகளை உருவாக்கிய பல இயக்குனர்கள் அவரவருக்கான தனித்தனி திரைமொழிகளை உருவாக்கி விட்டுப் போய் உள்ளனர். அறிவுஜீவிக் குழுக்களுக்கு இவ்வியக்குனர்களின் திரைப்படங்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது என்று புரியலாம். னால் மிகு விழுக்காட்டில் இப்படங்களைப் பார்க்கும் கீழ்த்தட்டு மக்களுக்கு இவை படத்தில் சொன்னபடி புரிவதில்லைதான். வீட்டில் திரியும் பெருச்சாலிகள் மனிதகளை கடிக்கும் போது ஊதி ஊதி கடிக்கும் தன்மை கொண்டது. சில இயக்குனர்களின் படங்களும் இவ்வாறான எலிக்கடிகள்தான்.
யானைக்கும் அடி சறுக்கும். பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் அமீர் என்னும் யானைக்கு அடி சறுக்கி உள்ளது. அமீரை யானை என்று சொல்வதா வேண்டாமா என்பதும் முடிவு செய்ய வேண்டிய விஷயம். இன்று நகரம் தொடங்கி பட்டித் தொட்டிகளில் எல்லாம் பரபரப்பாக பேசப் பட்டும் கொண்டாடப் பட்டும் கொண்டிருக்கும் பருத்தி வீரன் திரைப்படத்தில் மக்கள் கண்டதும் ரசிகர்கள் ரசித்ததும் என்ன? அவர்களுக்கே தெரியாது.
சண்டித்தனம் பொறுக்கித்தனம் என்ற இருவார்த்தைகளும் பொருளில் வேறுபடுபவவை பருத்திவீரன் திரைப்படத்தின் நாயகன் படத்தில் சண்டியர் என்று விளிக்கப் பட்டாலும் அவன் செல்வதெல்லாம் பொறுக்கித்தனம்தான். சண்டியர்கள் முரடர்களாகவும் முன்கோபிகளாகவும் வாயால் பேசாமல் கையால் பேசும் இயல்புடையவர்களாகவும் பலசாலிகளாகவும் மட்டுமே இருப்பார்கள் என்பது முன் தலைமுறையினர் கொடுக்கும் விளக்கம். இப்படியாயின் பருத்திவீரன் தரமுத்திரைக் குத்தப்பட்ட பொறுக்கியாகவோ அல்லது 'லும்பனாகவோ' முத்திரைக் குத்தப் படுகிறான்.
லாரி ஓட்டுனர்கள் மிரட்டி அவர்கள் அழைத்து வரும் விபச்சாரியுடன் ஓசியில் ஒதுங்கிக் கொள்ளும் மட்டரகமான குணாம்சமாக காட்டப் படுகிறது. இந்த இடத்தில் இயக்குனர் வைத்திருக்கும் அரசியல் வியக்கத் தக்கது. ஜாதி மாறிப் பிறந்தவனை உயர் ஜாதிக்காரர்கள் சேர்த்துக் கொள்ளாத காரணத்தால் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் பொறுக்கியாக வாழ்கிறான். இந்நிலையில் லாரி ஓட்டுனர்களாக வரும் பாத்திரங்கள் இவனை அண்ணன் என்று அழைக்கின்றன. மேலும் தாங்கள் அழைத்து வந்தப் பெண்ணுடன் உறவு கொண்டது போல் நீங்கள் அழைத்து வருகையில் எங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்கின்றன். இந்த ஒப்பந்தத்திலிருந்து லாரி ஓட்டுனர்களாக வருபவர்கள் பருத்தி வீரனின் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது. இவ்வாறான ஜாதியினர் தான் இத்தகை செயல்களில் ஈடுபட முடியுமென்றும் இவ்வாறான ஒப்பந்தங்களை செய்து கொள்ள முடியுமென்றும் சொல்வதாக புரியாதவர்களை என்ன சொல்லலாம்.
இறுதிக் காட்சியில் இந்த லாரி ஓட்டுனர்களாலேயே உயர்ஜாதி நாயகி வன்புணர்ச்சி செய்யப் படுகிறாள். இவ்வாறான ஜாதி கெட்டப் பயலோடு ஓடினால் உனக்கு இதுதான் கதி என தான் தரவளிக்கும் உயர்ஜாதி மக்களுக்கும் அவர்தம் மகள்களுக்கும் அறிவுறை கூறுகிறாரோ? ' நீ என்ன பெரிய சண்டியரா? என்று நாயகி நாயகனைப் பார்த்துக் கேட்கையில் உன் ஜாதிக்காரன் எப்பொழுதுமே சண்டியராக முடியாது என்ற தொனியில் கேட்பதாக இல்லையா? குண்டியில் குத்துப் பட்டு அவமானப் பட்டாலும் தனது சிஸ்யர்களுடம் மிடுக்காக இருக்கும் குஸ்தி வாத்தியார்தான் சண்டியர். இதைத் தானே சொல்ல வருகிறார் இயக்குனர். இல்லையா?
ஜாதி தாழ்ந்தவன் , ஜாதி கெட்டவன் எனப்பட்டவர்களுடன் வாழ நினைக்காதே இதுதான் உனது கதி என்பதுதான் படத்தின் உட்கருத்தாக புரியப் படுகிறது. கத்தியெடுத்தவன் கத்தியால் சாவான் என்றால் பருத்திவீரன் கொல்லப் பட்டிருக்க வேண்டும். இங்கு பாவத்தின் பலனை அனுபவிப்பது பருத்திவீரனை நேசித்த முத்தழகுதான்.
இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாதபடிக்கு அரவாணிகளையும் அவர்தம் கலை ஈடுபாட்டையும் காட்டி இருப்பதாக பிரபல விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். னால் ' ஏன் கையில வைச்சிக் கிட்டு சும்மா நிக்கிறீங்க, வாயில வைச்சு ஊதுங்க, நீங்க ஊதுரீங்களா இல்ல நான் ஊதட்டுமா?'' என்ற ஒரு வசனத்தை எழுதி படப்பிடிப்பின் போது சொல்லிக் கொடுத்து பத்து டேக்குகள் வாங்கி பதிவான இந்த வசனம் தெரியாமலோ தற்செயலாகவோ அமைந்திருக்க முடியாதுதான். படத்தில் அதிகபடியான அரவாணிகள் பயன்படுத்தப் பட்டிருப்பதாக ஒருவர் சந்தோஷம் அடைந்துள்ளார். அவர்கள் அத்தனை அவமானப் படுத்தப் பட்டிருப்பதாக வருத்தம் கொள்ளத்தான் முடிகிறது.
எதார்த்தமாக படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் இப்படி கூத்தடிக்கலாமோ. அரவாணிகளுக்கு சமூகம் அத்தகை மதிப்பைத் தான் கொடுக்கிறது எனவும் அரவாணிகள் அவ்வாறுதான் பேசித் திரிகிறார்கள் எனவும் இதுதான் நடைமுறை எனவும் இயக்குனர் விளக்கம் சொல்வாரேயானால் அவர் மீது பரிதாபம் தான் ஏற்படுகிறது.
தன் மகள் ஓடிப் போய் விட்டதை விடவும் அவள் ஜாதிகெட்டவனோடு ஓடிப் போய் விட்டாள் அதனால் அவனை வெட்டு என அலையும் கூட்டத்தை காட்டி இயக்குனர் நமக்கு என்ன சொல்ல விரும்புகிறார். இனி சமூகத்தில் கலப்பு திருமணங்கள், ஜாதி மாறிய காதல் திருமணங்கள் நடக்கக் கூடாது எனவும் அப்படி உங்கள் மகளோ தங்கையோ ஓடிப் போய் விட்டால் அவர்களை விட்டு யாருடன் ஓடிப் போனாலோ அவனை வெட்டு என்று அரிவாள் தூக்க சொல்லிக் கொடுக்கிறாரோ. இதில் பருத்தி வீரனின் சித்தப்பாவாக வரும் செவ்வாழை மற்றும் அப்பாத்தாளை கவனமாக தப்பிக்க விட்டிருப்பது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு யாரும் விளக்கம் தர முன் வர மாட்டார்கள் தான்.
கலையை ரசித்து விட்டுப் போக வேண்டும் இப்படி பூதக் கண்ணாடி கொண்டு குத்தி கிளரி பார்க்கக் கூடாதுதான் னால் இவ்வாறான கலைப் பதிவுகளை தனது காம்பாவுண்டுக்குள் மட்டும் காட்டாமல் பட்டித் தொட்டிகளில் எல்லாம் போட்டுக் காட்டுவதனால்தான் இந்த படபடப்பு.
இயக்குனர் அமீரின் ''ராம்'' என்றப் படத்தில் நாயகனின் தாய் கொல்லப் படுகிறாள். அவளைக் கொன்றவனைப் பழிவாங்கக் கிளம்புகிறான் நாயகன். இதுவரை சரி னால் பழிவாங்க செல்லும் முன் காவி அடை தரித்து புகை மூட்டத்தினுள் புகுந்து பிரகாரம் சுற்றுவதும், மலை உச்சியில் ஒற்றைக் கால் தவம் செய்வதும், இந்து மதக் கடவுள்கள் சம்காரம் செய்யும் முன் மேற்கொள்ளும் உக்கிர நடவடிக்கைகளைப் போல் செய்வதும் என காட்டியிருப்பது எதற்காக. மதத்தினை வலிய திணிப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லையே.
பருத்திவீரன் படத்திலும் நாயகன் மனம் திருந்தி நாயகி முத்தழகின் காதலை ஏற்று அவளை பெண் கேட்க செல்லும் முன் திருநீர் இட்டுக் கொள்வது எதைக் காட்டுகிறது. ஒருவன் திருந்த வேண்டுமாயின் மதம் துணையாய் இருக்க வேண்டும். திருநீர் என்னும் புனிதசாம்பல்தான் அவனைத் தூய்மை படுத்த வேண்டும். இது எத்தனை திட்டமிட்டச் செயல். இப்படி தனது திரைப்படங்களை மதங்களுக்கு தரவு காட்டி வருகிறார் இயக்குனர். மார்பில் குத்துபவரை எதிர் கொள்ளலாம் அவர்கள் குறித்து பயமில்லை னால் உறவாடிக் கொல்பவர்களிடம் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். இயக்குனர் அமீர் மட்டுமல்ல இந்த வரிசையில் இன்னும் பல முன்னனி இயக்குனர்களைச் சேர்க்கலாம்.
இந்தப் படத்தினை மிகு எதார்த்தத்தோடு படம் பிடித்து இருப்பதற்காகவும் கதாபாத்திரங்கள் மிக இயல்பாக பேசி நடித்திருப்பதற்காகவும் மட்டும் பாராட்ட வேண்டுமானால் பாராட்டிக் கொள்ளலாம். னால் அதுவும் புதுமையில்லை. இதற்கு முன் இதை விடவும் எதார்த்தமான படங்கள் வெளியாகி வெற்றி கண்டுள்ளன. பருத்திவீரன் படத்தின் சண்டைக் காட்சிகளைப் பார்க்கையில் அவை எதார்த்தமானவையாக நம்ப முடியவில்லைதான். கேட்டால் நாங்கள் கலையை வளர்க்க மட்டுமல்ல காசு பார்க்கவும் வந்துள்ளோம் என்று விளக்கம் கொடுத்து விடுகின்றனர். ' சரிகமபதனி சொல்லித்தரேன்' பாடலும் கற்பனைக்கு அப்பார்ப்பட்ட பலத்துடன் தடியன்களை நாயகன் டும் பந்தாட்டமும் காசு பார்க்க செய்து கொண்ட காம்பிரமைஸ்(சமாதானம்) என்று விலகி விடவேண்டும்.
இறுதியில் நடக்கும் கற்பழிப்பு காட்சியும் மிக எதார்த்தமாகத்தான் படம் பிடிக்கப் பட்டுள்ளது. தனது பெற்றோர் முன்னும் ஊரார் முன்னும் தன் மனைவி தோளில் கை போட்டு நடக்கத் தயங்கும் தம்பதிகளைக் கொண்டதுதான் இந்தியச் சமூகம் இதில் வன்புணர்ச்சி காட்சியை இப்படி காட்டினால்தான் எதார்த்தமாக இருக்கும். அதையும் மிக நீண்ட நேரம் காட்டியிருப்பது இயக்குனர் எதார்த்தத்தில் லயித்திருப்பது புரிகிறது. புதிய பாபாதை, மண்வாசனை மற்றும் சில படங்களின் கதம்ப கலவை போல் இப்படம் உணரப் படுவது புதுமைதான்.
எட்டு வயதில் பருத்தி வீரனால் காப்பாற்றப் பட்ட உடலை அவனுக்கே கொடுக்க வேண்டும் என்று உறுதியாய் இருக்கும் முத்தழகின் பாத்திரம் எத்தனை பரிதாபம். அவருக்கு தனது நாயகன் திருந்த வேண்டும் என்பதில்லை. அவன் வேண்டுமானால் தனது தந்தையைக் கூட வெட்டிப் போடட்டும் னால் தன் உடலை அவனக்குத் தர வேண்டும் அவ்வளவுதான். கிராமத்துப் பெண்கள் இப்படித்தான் தங்கள் உடல்களை பட்டயம் எழுதி காத்திருக்கிறார்களோ?. பொறுக்கிகளையும், கொலை, கொள்ளை, விபச்சாரம் என ஊறிப்போகும் நாயகர்களை காதலிக்கும் ஒரு பெண் எத்தனை மனநிலையை உடையவள். பருத்தி வீரன் எந்த விதத்திலும் நல்லவனாகக் காட்டப் படவில்லை. மற்றப் படங்களில் இவ்வாறான நாயகர்கள் மனதிலும் ஈரம் இருக்கிறது என்பதை காட்டும் படியான காட்சிகளை அமைப்பதுண்டு. பருத்திவீரனில் அப்படியுமில்லை.
இவ்வாறானப் படங்களைப் பார்க்கும் இளைஞர்கள் பொறுக்கித்தனம் செய்யவும் அவ்வாறான பொறுக்கிகளை இளைஞிகள் காதலிக்கவும் வேண்டும். அதுதான் நாகரீகமோ. உலக அரங்கில் இவ்வாறானப் படங்களைக் காட்டும் போது அவர்கள் நம் மக்களின் பண்பாட்டை குறைமதிப்பிட மாட்டார்களா.
பருத்தி வீரன் மட்டுமல்ல இன்னும் பல திரைப்படங்கள் இப்படித்தான் உலக அரங்கில் நம் மானத்தை வாங்குகின்றன. நாட்களாய் திட்டமிட்டு கதை, காட்சி, வசனம் என துண்டு துண்டாய் விவாதம் செய்து செய்யப் படும் இவ்வாறான படங்கள் திட்டமிட்ட சதியன்று வேறேன்ன? படச்சுருளின் ஒவ்வொரு சட்டத்திற்குள்ளும் என்னென்ன பதிவாக வேண்டும் என்று திட்டமிடும் இவர்கள் தங்களை அறியாமலா இந்த மாதிரியானவைகளை பதிய விடுகிறார்கள். இவ்வாறானவற்றை தவிர்க்கலாம். எதிர்க்கலாம். குறைந்தது இவ்வாறான படங்களுக்கு தரவு கொடுக்காமல் இருக்கலாம்.
Saturday, June 9, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment